உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா ! எனக்கு மீண்டும் சில விடயங்கள் பற்றி உங்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். நான் புகைப்பட பிடிப்பாளராகவும், அதே நேரம் வீடியோ ஒளிப்பதிவு செய்து எடிட்டிங் செய்து கொடுப்பதே எனது பிரதான தொழில். நான் புகைப்படத்தை “அடொபி போட்டோ ஷாப்” பிலும் வீடியோவை PINNACALE STUDIO, ULEAD, COREL மற்றும் POWER DIRECTOR போன்றவைகளிலயே செய்து கொடுக்கின்றேன். பழைய சங்கையே நான் மீண்டும் மீண்டும் ஊதிக் கொண்டு இருப்பதனால் பல போ் இதனை விரும்புகிறார்களில்லை. வாடிக்கையாளா்களும் குறைவடைகிறார்கள். வீடியோவை புதிய டிசைன்ஸ் வடிவிலே ஹாலிவூட் முறையில் தயாரிப்பதற்கு புதிய இலவச மென்பொருள் உண்டா….? இருந்தால் தாருங்களேன் அண்ணா………? ப்ளீஸ்……….! இது போன்று போட்டோவினை சரியான முறையில் துள்ளியமாக கட் பன்னி செய்வதற்கும் வழியுண்டா…? இதற்கும் ஓா் வழி சொல்லுங்களேன்.
-
THAAJDEEN
Reply
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 9:59 பிப on மாசி 22, 2012 Permalink | Log in to Reply
புகைப்படங்களை துல்லியமாக வெட்டுவதற்கும் சரிப்படுத்துவதற்கும் எனக்கு தெரிந்து போட்டோசொப்பினை விட சிறந்த மென்பொருள் ஏதும் இல்லை. மிகப்பிந்திய பதிப்பை வைத்திருப்பதும் நன்றாக அதனை கற்றுக்கொள்ளுவதும் பயன்தரும். இணையத்தில் உதவிக்குறிப்புக்களை தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.
ஒளிப்படத்தொகுப்புக்கு சிறந்த பல இலவச மென்பொருள்கள் இருந்தாலும், தொழில் முறையாய் செய்பவர்கள் பெரிதும் பயன்படுத்துவது வணிக ரீதியான அடொபி பிறீமியர் அல்லது final cut pro இனையே.
இலவச மென்பொருள்கள் என்ற வகையில் மிகச்சிறந்தது என்று கூறக்கூடியது LIghtWorks. இந்த மென்பொருள் ஏறத்தாள இருபது வருட காலமாக பல ஹொலிவுட் படத்தயாரிப்புக்களில் உதவி வந்தது. 2010 இல் திற மூல மென்பொருளாக பொதுமக்கள் பாவனைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு 2011 இல் வெளியிடப்பட்டது.
தரவிறக்க : http://www.lightworksbeta.com/
THAAJDEEN 10:33 முப on மாசி 23, 2012 Permalink | Log in to Reply
சிரமம் பாராது, எனது கேள்விகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்கும் அண்ணா…. உங்களுக்கு எனது மனமார்ந்த, மனம் நிறைந்த நன்றிகள்….! மீண்டும் சந்திப்போம்.
பகீ 10:47 முப on மாசி 24, 2012 Permalink | Log in to Reply
உதவ முடிவதில் மகிழ்ச்சியே