வணக்கம் அண்ணா
உங்கள் இந்த தளத்தில் Google Adsense ஐப் பார்த்தேன். இப்பொழுது Google Adsense தமிழ் மொழியை ஆதரிக்குதா ?
Recent Updates Page 2 RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
kannan
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா..! இனையத்தளத்தில் பணம் சேர்ப்பது உண்மையா..? அதாவது, எனக்கு நண்பர் ஒருவர் சொன்னார், http://www.twodollarclick.com மூலமாக 1000 டொல்லர் வரைக்கும் சேர்த்தால் இறுதியில் அந்தப் பணம் நமக்கு கிடைக்குமாம். இது எந்தளவில் உண்மை என்பது எனக்கு புரியவில்லை, இது பற்றி தாங்களுக்கு தெரியுமா…? தெரிந்தால், இது பற்றிய தெளிவான, விரிவான விளக்கம் தாருங்களேன்….?
-
பகீ
பொதுவாக இப்படியான சேவைகளை பொதுவாய் நான் நம்புவதில்லை. 1000 டொலர்கள் வரை சேர்ப்பதற்குள் உங்களுக்கு அலுத்துப்போய் நீங்கள் தொடுப்புக்களை சொடுக்குவதை நிறுத்திவிடுவீர்கள் அல்லது 1000 டொலர்கள் சேர்த்தபின் அவர்கள் ஏதாவது காரணம் சொல்லி உங்கள் கணக்கை நிறுத்திவிடுவார்கள்.
http://www.twodollarclick.com நிச்சயமாக ஒரு scam site. அவர்கள் ஒருபோதும் ஒருவருக்கும் பணம் அனுப்பியது கிடையாது.
-
-
அரிகரன்
பகீ ஐயா தமிழ் நிரலாக மொழி setup files கோப்பு எந்த இணையத்தில் கிடைக்கும்?இரும(binary language)பற்றி கூறவே இல்லை,அது போல் இல்லையா?இதற்கு முன் கேள்விக்கு பதில் அளித்தற்கு நன்றி.
-
பகீ
தமிழில் உள்ள இரும மொழிகள் பற்றி நான் எதுவும் அறிந்ததில்லை. அது சாத்தியம் என நான் நினைக்கவில்லை.
-
-
அரிகரன்
பகீ ஐயா கணினி மொழி c,c++,java போன்ற நிரலாக மொழி தமிழில் உள்ளதா?குறைத்த பட்சம் இரும மொழி ஆவது உள்ளதா?
-
பகீ
பயன்பாட்டில் உள்ள மொழி எதுவும் இல்லை. சிலர் முயற்சித்து உருவாக்கி இருக்கின்றார்கள். தொடர்ச்சியான மேம்பாடுகள் இருந்ததில்லை.
நீண்டகாலத்தின் முன்னர் நான் ஒரு மொழியை (சரியாக பெயர் நினைவில்லை, கம்பன் அல்லது அம்மா என்பதாயிருக்கலாம்) பரிசோதித்ததாய் நினைவு. ஒரு compiler உடன் வந்தது. functional மொழியாய் இருந்திருக்க வேண்டும். அடிப்படையான கணிதம் மற்றும் logic என்பன இருந்ததாய் நினைவு.
எழில் என்கின்ற மொழி சம்பந்தமான விபரங்களை இங்கே பாருங்கள்.
http://arxiv.org/pdf/0907.4960.pdf
சுவாரம் எனும் மொழி தொடர்பான விடயங்கள் இங்கே..
-
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா..! என்னுடைய YAHOO MESSENGERரில், எனக்கு அறியப்படாத சில நண்பர்கள் எனக்கு CHAT செய்து, என்னை மிகவும் எரிச்சலுக்கு உள்ளாக்கிறார்கள். நான் எந்த நேரம் YAHOO MESSENGERரை ஆன் செய்தாலும், அவர்களும் ONLINEலயே இருந்து கொண்டு, உடனே ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக MESSAGE அனுப்பிய வண்ணமாகவே இருக்கிறார்கள். இவர்களை என் MESSENGERரில் இருந்து தடை செய்வதற்கு ஏதாவது வழி இருப்பின் சொல்லுங்களேன்…? உங்கள் தொலைபேசி இலக்கத்தை எனது EMAILக்கு அனுப்புவதாகச் சொன்னீர்கள், இன்னும் அனுப்பவில்லையே…! ப்ளீஸ் உங்கள் தொலைபேசி இலக்கத்தை தாருங்களேன் அண்ணா….?
-
venkatarajulu
dear sir
i want same help from you for micro excel 2007.
please help me.
thanks
venkatarajulu-
பகீ
நீங்கள் Macros இனை பற்றி கேட்கின்றீர்கள் என நினைக்கின்றேன். எனக்கு அவ்வளவு சிறப்பாய்த் தெரியாவிட்டாலும், உங்கள் கேள்வியை சரியாய் கேட்டீர்களானால், பதிலளிக்க முனைகின்றேன்.
-
venkatarajulu
Dear bagersir
sorry. i want microsoft office excel 2007 help. I want in excel sheet for store work. i want VBA program for this work.
venkatarajul
mumbai
-
-
அரிகரன்
மடிகணினி ஒன்று வாங்கினேன்,அதில் வேப்கேம்,புளுtooth,wireless இல்லை அதை எந்த நிறுவனம் தனியாக விற்பனைக்கு கொடுக்கும்
-
பகீ
சாதாரணமாக கணினி வன்பொருள்களை விற்கும் எந்த கடையிலும் வாங்கலாம். USB இல் பொருத்தக்கூடியவகையில் இரண்டுமே கிடைக்கின்றன.
-
-
Dinesh
hi anna,
i want to work in freelancer i don’t know how to know that am selected even if i bid in several projects no one seems to reply please help me how to work in freelancer?-
பகீ
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது பதிவுகளை பாருங்கள்.
http://oorodi.com/tutorials/இணையத்தில்-இலகுவாய்-பணம்.html
நீங்கள் உங்கள் முதலாவது வேலையினை பெறுவது முற்றுமுழுதாக நீங்கள் செய்யும் கோரலிலேயே தங்கியுள்ளது. சரியான ஆங்கிலம் மற்றும் பொருத்தமான தகவல்கள் இருக்கவேண்டும். முதலாவது வேலையில் கிடைக்கின்ற அனுபவம் தொடர்ச்சியான வேலைகளுக்கான அடித்தளமாயிருக்கும்.
உங்கள் கோரல் தெரிவு செய்யப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
-
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா…! நான் இனையத்ளத்தில் சில மென்பொருட்கள் தரவிறக்கம் செய்தால், உதாரணமாக 500 MB மென்பொருள் ஒன்று தரவிறக்கம் செய்கிறேன். அவ் மென்பொருள் எனக்கு முழுமையாக தரவிறக்கம் கிடைக்கிறது. ஆனால் தரவிறக்கம்
முடிந்தவுடன் எனக்கு அந்த மென்பொருள் ஓர் காப்சீட், சித்திரம் வரையும் தால் போன்று மாத்திரமே காட்சி தருகிறது. இதனை நான் OPEN செய்தால், நேரடியாக இனையம் சென்று BITZIPPER மென்பொருளை தரவிறக்கச் சொல்கிறது. BITZIPPER மென்பொருளை தரவிறக்கம் செய்தாலும் கூட, ஏற்கனவே தரவிறக்கம் செய்த 500 MB மென்பொருளை INSTALL செய்து கொள்ள முடிவதில்லை. காரணம் என்ன? முடியுமானால் உங்கள் தொலைபேசி
இலக்கத்தையும் தாருங்களேன்?-
பகீ
இரண்டு காரணங்களாயிருக்கலாம்.
1. உங்கள் தரவிறக்கம் பூரணமடையவில்லை.
2. உங்களிடம் extract செய்வதற்கான சரியான மென்பொருள் இல்லை.தரவிறக்கப்பட்ட கோப்பின் பெயரை சரியான extension உடன் சொல்லுங்கள். அல்லது தரவிறக்கப்பட்ட முகவரியை தாருங்கள், பார்க்கின்றேன்.
எனது கைத்தொலைபேசி இலக்கத்தை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்றேன்.
(உங்கள் மறுமொழியை புதிய கேள்வியாயிடாமல், இதற்கு கீழே மறுமொழியாயிடுங்கள்.)
-
THAAJDEEN
எனக்கு இனையத்தளத்தின் பெயர் சரியாக ஞாபகமில்லை. ஆனால் நான் தறவிறக்கம் செய்த மென்பொருளின் பெயர் இதுதான் MediaGet2.dmg 31.9 MBகளை கொண்டது.
-
பகீ
dmg என்கின்ற கோப்பு அப்பிள் கணினிகளுக்கானது. வின்டோஸில் வேலை செய்யாது.
-
THAAJDEEN
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா!
-
-
-
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா…! நான் இனையத்ளத்தில் சில மென்பொருட்கள் தரவிறக்கம் செய்தால் அந்த மென்பொருட்கள் வெறும் சித்திரதால் போன்றே சில நேரங்களில் மாத்திரம் தருகிறது. இதனை என்னால் INSTALL செய்ய முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன? இதற்கு நான்
WINZIP பாவித்தாலும் கூட INSTALL செய்து கொள்ள முடிவதில்லை. இது ஏன்? விளக்கம் தாருங்களேன்……?! முடியுமானால் உங்கள் தொலைபேசி இலக்கத்தையும் தாருங்களேன்?-
பகீ
உங்கள் கேள்வி சரியாக விளங்கவில்லை. நீங்கள் தரவிறக்கம் செய்வது எவ்வாறு வருகின்றது??
-
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 2:10 பிப on சித்திரை 28, 2012 Permalink | Log in to Reply
உங்கள் தளம் போதுமான அளவு வருகையாளர்களை கொண்டிருப்பின் உங்களால் நிச்சயம் ஒரு கணக்கை பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் உங்களிடம் ஆங்கிலத்தளம் ஒன்று இருத்தல் வேண்டும்.