Tagged: Web Hosting RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • chinnamalai 3:22 pm on April 4, 2012 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: , Web Hosting   

    அண்ணா webhosting கற்றுக்கொள்ள வேண்டும்.இணையத்தில் ஏதேனும் தளம் உள்ளதா சொல்லவும்.அதை போல் webhosting செய்ய சிறந்த தளத்தினை கூறவும்.

     
    • பகீ 12:31 பிப on சித்திரை 5, 2012 Permalink | Log in to Reply

      தமிழில் அவ்வளவாக webhosting பற்றி சொல்லும் தளங்கள் இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் பல உண்டு. நீங்கள் ஒரு VPS அல்லது Dedicated வழங்கியை நிருவகிப்பதற்கு கற்றுக்கொள்ளுவதானால், உங்கள் கணினியில் Cent OS லினிக்ஸ் மற்றும் LAMP இனை நிறுவிக்கொண்டு நீங்களாகவே கற்றுக்கொள்ளலாம்.

  • thana 1:00 am on December 15, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Web Hosting   

    அண்ணா நான் unlimited server மிக மலிவாக வாங்க முடியுமா? எவ்வளவு செலவாகும்.தாங்கள் என்ன விலைக்கு வழங்குகிறீர்கள்.webhostingpad இல் எனது நண்பன் 7500 ரூபாவுக்கு 3 வருடங்களுக்கு வாங்கியதாக கூறுகிறான். அதை விட மலிவாக பெற முடியுமா…? விரைவாக பதிலிடவும். ப்ளீஸ்..

     
  • ravi 8:13 am on February 19, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Web Hosting   

    ஊரோடி!
    linode.com சேர்வர்களைப் உபயோகிக்க OR பராமரிக்க எவ்வகையான‌ தொழில்நுட்ப அறிவு வேண்டும்?

     
    • பகீ 9:22 முப on மாசி 19, 2011 Permalink | Log in to Reply

      லினோட் ஒரு மிகச்சிறப்பான இணைய வழங்கி சேவை. உங்கள் வீட்டிலிருந்து ஒரு இணைய வழங்கியை நடாத்துவதானால் எவ்வளவு தொழிநுட்ப அறிவு தேவையோ அவ்வளவு அறிவு உங்களிடம் இருந்தால் மட்டுமே லினோட்டினை பயன்படுத்த முடியும். என்னிடம் ஒரு லினோட் கணக்கும் உண்டு. அடிக்கடி உதவிக்குறிப்புகளை தேடி அலைவது நடக்கும்.

      நீங்கள் உங்கள் கணினியில் cent os இனை நிறுவி command களை கற்றுக்கொண்டு பின் லினோட்இடம் செல்வதே நன்று. (நீங்கள் எந்த லினிக்ஸினையும் பயன்படுத்த முடியுமாயினும், ஒரு வழங்கிக்கு சிறப்பானது cent os)

  • ravi 1:19 pm on February 9, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Web Hosting   

    “மிக அதிக பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் வலைத்தளம் சரிவர இயங்காமல் போகும் அபாயம் ஏற்பட்டு அந்த பதிவையே நான் தற்காலிகமாக நீக்கும் அளவிற்கு போய்விட்டது.” Source – cpraveen.com/suvadugal இதை தவிர்க்க ஹோஸ்டிங் சேவையை வாங்கும் போது எதைக் கவனிக்க வேண்டும். Histgatorன் ஒரு சாதாரண ஹோஸ்டிங் கணக்கை கொண்டு உருவாக்காப்பட்ட தளத்தை ஒரே நேரத்தில் எவ்வளவு பேர் பார்க்க முடியும்?

    Ravi
     
    • பகீ 9:27 பிப on மாசி 9, 2011 Permalink | Log in to Reply

      Bandwidth என்பதுதான் நீங்கள் எவ்வளவு பேர் உங்கள் தளத்தை பார்வையிட அனுமதிக்கும் என்பதை தீர்மானிக்கும். எனவே ஒரு இணைய வழங்கியை வாங்கும் போது அதனை கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சாதாரண hostgator கணக்கு உங்கள் தளத்திற்கு மாதம் 20000 மேற்பட்டோரை எந்த பிரச்சனையும் இன்றி அனுமதிக்கும்.

  • ravi 4:52 pm on January 30, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Web Hosting   

    ஹாய் பகீ.

    நான் தற்போது Web Hosting பயிற்சி எடுப்பதற்காக 0fees.net / 000webhost.com ஆகியவற்றில் கோப்புக்களை அப்லோட் செய்து பயிற்சி எடுக்கின்றேன். அப்லோட் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றது. எனது கணணியின் வன்தட்டையே சேர்வர் ஆக பவிக்க முடியுமா.

    1. எனது கணனியை ஒரு சேர்வர் ஆக மாற்றிக் கொள்ள முடியுமா? (பயிற்சிக்காக மாத்திரம் )
    2. அதற்கு தேவையான மென்பொருட்கள் என்ன?
    3. அதனை எவ்வாறு செய்வது?

     
    • பகீ 4:55 பிப on தை 30, 2011 Permalink | Log in to Reply

      • ravi 5:23 பிப on தை 31, 2011 Permalink | Log in to Reply

        இலவச ஹோஸ்டிங் பொதிகளில் Data Transfer – 100 GB என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றதே. இவற்றை பற்றி விளக்க முடியுமா? OR லின்க் தரவும்.

        • பகீ 10:50 பிப on தை 31, 2011 Permalink | Log in to Reply

          ஒரு மாதத்திற்கு உங்களுக்கு 100 GB டேராவினை பரிமாற வழங்கி அனுமதிக்கும். உதாரணமாக உங்கள் வழங்கியில் 100Mb கோப்பு ஒன்றை தரவிறக்க கொடுத்தீர்களானால் 1000 தடவைகள் மாத்திரமே ஒரு மாத்தில் அதனை தரவிறக்க முடியும்.

          உங்கள் இணையத்தளத்தை ஒருவர் பார்வையிட்டால் அதற்கு 2Mb தரவு பரிமற்றம் நடைபெறுகிறது எனக்கொள்வோம். அப்படியானால் உங்கள் இணையத்தளத்தை ஒரு மாதத்தில் மொத்தமாக 50,000 தடைவைகள் பார்வையிட முடியும்.

          • ravi 12:20 முப on மாசி 1, 2011 Permalink | Log in to Reply

            Unlimited Data Transfer என்று கூறிவிட்டு பின்னால் இவ்வளவுதான் தரமுடியும் என்று ஏமாற்றும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றதா?

  • ravi 12:18 pm on January 29, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Web Hosting   

    ஹாய் பகீ.

    வெப்ஹோஸ்டிங் செய்ய சிறந்த தளம் எது? மலிவானது எது? நான் ஒன்றுக்கு மேற்பட்ட டொமைன்களை ஒரே கணக்கில் ஹோஸ்டிங் செய்ய எந்த பொதி நல்லது?
    நன்றி
    ‍ ரவி

     
    • பகீ 8:54 பிப on தை 29, 2011 Permalink | Log in to Reply

      ரவி,

      நான் bluehost மற்றும் gostgator இனை பரிந்துரை செய்வேன். தயவுசெய்து godaddy பக்கம் சென்றுவிடாதீர்கள்.

      உங்களிடம் தொழிநுட்ப அறிவு இருந்தால் linode மற்றும் slicehost சிறப்பானவை.

      பகீ.

      • ravi 12:53 முப on தை 30, 2011 Permalink | Log in to Reply

        நன்றி பகீ.

        1. நான் இப்போது இலவச சேவையான 000webhost.com Hosting செய்துவருகின்றேன். அவர்களின் தளமான http://www.hosting24.com என்ற தளம் சிறந்ததா?

        2.மற்றும் டொமைன் வாங்கும் பொழுது .com .in .us .org .net இதில் எது சிறந்தது.

        நன்றி
        ‍ ரவி

        • பகீ 10:29 முப on தை 30, 2011 Permalink | Log in to Reply

          ரவி,

          1. உங்களுக்கு http://www.hosting24.com/ ஒரு டொமைனை இலவசமாக வழங்கினாலும், பல டொமைகளை ஒரே கணக்கில் வைத்திருக்க முடியாது என நினைக்கின்றேன்.

          2. com எப்பொழுதும் சுகமாக பயனாளர்களை சென்றடையக்கூடியது. அதற்கடுத்ததாக org மற்றும் net இனை சொல்லலாம். in மற்றும us போன்றவை குறிப்பிட்ட நாட்டுக்குரியதானதாக அந்த தளங்களை மாற்றிவிடும் (உண்மை அதுவல்லாது விடினும், வாசகர்களின் எண்ணப்போக்கு அவ்வாறானதாகவே இருக்கும்.). அப்படியான தளங்களுக்கு வேறு நாடுகளில் இருந்து வாசகர்கள் வரத்து குறைவாகவே காணப்படும்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel