Tagged: Wordpress RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • atha 7:01 pm on April 26, 2012 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Wordpress   

    hi nan wordpress la http://brokencrust.com/this-day-in-history/ enra widget pavikiran
    athula tamil ahh type paninal display akuthu illa
    ethuku unkalala ethavathu thirvu thara mudiuma

     
    • பகீ 2:14 பிப on சித்திரை 28, 2012 Permalink | Log in to Reply

      உங்கள் தரவுத்தள connection collation ஆனது UTF8 இல் இருக்கின்றதா எனப் பாருங்கள். குறிப்பாக இந்த நீட்சியின் தரவுத்தள அட்டவணைகளை சரிபாருங்கள்.

      UTF8 இல் இல்லாவிடின் அதற்கு மாற்றிவிடுங்கள்.

  • thana 3:16 am on March 3, 2012 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: audio streaming, Wordpress   

    அண்ணா நேரடியாக audio stream செய்ய wordpress plugins உள்ளதா..?
    அண்ணா எனக்கு தயவு செய்து விரைவாக பதிலிடுங்கள்

     
    • பகீ 10:41 முப on பங்குனி 3, 2012 Permalink | Log in to Reply

      வேர்ட்பிரஸில் ஒலிக்கோப்பொன்றை தரவேற்றி நிச்சயமாக அதனை stream பண்ண முடியும். ஆனால் நீங்கள் Livestream செய்ய வேண்டும் என்றால் உங்களிடம் shoutcast போன்ற வழங்கிகள் இருக்க வேண்டும்.

      தரவேற்றி stream பண்ணுவதானால் பின்வரும் நீட்சிகள் உங்களுக்கு உதவக்கூடும்.

      http://wordpress.org/extend/plugins/haiku-minimalist-audio-player
      http://wordpress.org/extend/plugins/oembed-html5-audio/
      http://wordpress.org/extend/plugins/wpaudio-mp3-player/

      இவை HTML 5 இனையும் பயன்படுத்துவதால், Flash இல்லாதவிடத்தும் வேலை செய்யும்.

  • Jeya 5:13 pm on December 28, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Wordpress   

    பகீ அண்ணா,
    எனக்கு எப்பொழுதும் ஒரே தடவையில் பல படங்கள் தரவேற்ற வேண்டும், எல்லாம் முழு அளவில் Post இல் வர வேண்டும், ஒவரு படமாக Size அளவை மாற்றி insert post குடுப்பது நேரம் செலவாகின்றது..

    நான் வேர்ட்பிரஸ் இல்.. ஒரேதடவையில் பல படங்களை அப்லோட் செய்த பின் Media இல் சென்று ஒரே தடவையில் Insert post குடுக்கின்ற போது, வர வேண்டிய பக்கதில் எல்லா படங்களும் சிற அளவில்(thump size) வருகின்றன்.. அதை எப்படி Full Size என்று மாத்துவது?

     
    • பகீ 7:07 பிப on மார்கழி 28, 2011 Permalink | Log in to Reply

      தனித்தனியாகத்தான் தரவேற்றுவதுதான் பொதுவான வழி.

      நீங்கள் இரண்டாவதாக குறிப்பிட்ட முறை உண்மையில் ஒரு Gallery இனை உள்ளிடும் முறையாகும். இம்முறையை பயன்படுத்தி நீங்கள் கேட்டதுபோல படங்களை உள்ளிட ஒரு வசதி உண்டு. அதற்கு முதலில் உங்கள் media settings பக்கத்திற்கு சென்று அங்கு fullszie அல்லது medium இல் நீங்கள் உள்ளிட விரும்பும் அளவை சேர்த்து சேமித்துக் கொள்ள வேண்டும்.

      பின்னர் வழமைபோல எல்லா படங்களையும் தரவேற்றிய பின் உங்கள் post editor இல் கீழ்வருமாறு shortcode இனை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

      [gallery size="medium"]

      இங்கு size என்பது உங்கள் பட அளவை குறிக்கும்.

      மேலும் அறிந்துகொள்ள கீழிருக்கும் தொடுப்பை சொடுக்குங்கள்.

      http://codex.wordpress.org/Gallery_Shortcode

      • Jeya 9:15 பிப on மார்கழி 28, 2011 Permalink | Log in to Reply

        media settings இல் முதல் இருந்த மாதிரியே(Default setting) விட்டுவிட்டிருக்கின்றேன்..
        [gallery size="full" link="file" columns="1"] இங்கு நீங்கள் சொன்னமாதிரி size=”full” என்று சேர்க்கும் போது சரியாக வந்திருக்கு.. நன்றி அண்ணா, ஆனால் ஒவ்வொரு தடவையும் படங்கள் தரவேற்றும் போது இதை சேர்க்கவேணுமே.. இதை எப்பொழுதும் இப்படியே எப்பொழுது தரவேற்றினாலும் size=”full” ஆக வருகின்ற மாதிரி செய்ய முடியுமா..?

        நன்றி அண்ணா..

        • பகீ 11:04 பிப on மார்கழி 28, 2011 Permalink | Log in to Reply

          சாதாரணமாக அவ்வாறு செய்ய முடியாது என எண்ணுகின்றேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் இவ்வாறு சேர்க்கத்தான் வேண்டும்.

          (ஆனால் ஒரு filter இனை எழுதி உங்கள் வார்ப்புருவின் function.php இல் சேர்த்தால் அதற்கான வாய்ப்புண்டு. ஆனால் இது நீங்கள் சாதாரணமாக படங்களை தரவேற்றுவதை நிச்சயமாக பாதிக்கும்.)

  • tharsan 5:52 pm on October 17, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: 000webhost, hack, Wordpress   

    000webhost.com இல உள்ள எனது worpress தளத்தினை யாரே Hack செய்து root floder இல் உள்ள wordpress index,php file இணை மாற்றி இந்த file http://swissking.comoj.com/ind%20ex.php
    இணை இட்டுள்ளனர்.
    இது எவ்வாறான முறை ?
    000webhost இல் உள்ள குறைபாடா?

     
    • பகீ 3:42 முப on ஐப்பசி 18, 2011 Permalink | Log in to Reply

      இதை பூரணமாக 000webhost இனது பிழை என சொல்லிவிட முடியாது. பல காரணங்கள் இருக்கலாம்

      1. உங்கள் வேர்ட்பிரஸ் பதிப்போ அல்லது ஏதாவது ஒரு செருகியோ மிகப்பிந்திய பதிப்பிற்கு மேம்படுத்தப்படாதிருந்திருக்கலாம்.
      2. உங்கள் வார்ப்புரு சரியான முறையில் எழுதப்படாததாக இருக்கலாம்.
      3. பழைய timthumb கோப்பினை உங்கள் செருகி ஒன்று அல்லது வாரப்புரு பயன்படுத்துவதாயிருந்திருக்கலாம்.
      4. நீங்கள் எங்காவது ஒரு scam தளத்திலிருந்து வார்பபுரு ஒன்றை எடுத்து நிறுவியிருக்கலாம்.
      5. மிக மிக குறைந்தளவான சாத்தியமாயினும், 000webhost shared hosting என்பதால் அவர்களது வழங்கியிலிருக்கும் இன்னொரு இணையத்தளவமூடாகவும் தாக்குதல் வர சாத்தியம் உண்டு.

  • veera 9:17 pm on September 9, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Ipad Swap, Wordpress   

    first sorry boss, tamilila type panna mudiyala….
    ipad swap … self hosting themesila varamadenkuthu….. help panunkalaen please pluginsum ethuvum velai seyura mathiri therila.

     
    • பகீ 12:47 முப on புரட்டாதி 10, 2011 Permalink | Log in to Reply

      உங்கட கேள்வி சரியா விளங்கேல்ல…

      ஐபாட்டில தமிழில எப்பிடி தட்டச்சிறதெண்டிறதா கேள்வி?? அல்லது ஐபாட்டில வேர்ட்பிரஸ் சரியா வேலை செய்ய வைக்கிறது எப்படி எண்டிறதா கேள்வி?

  • tharsan 3:11 pm on May 27, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Wordpress   

    wordpress webhooks இணை எதற்கு பயன்படுத்துவது ?

     
    • பகீ 12:33 முப on வைகாசி 28, 2011 Permalink | Log in to Reply

      உங்கள் கேள்வியை சிறிது விளக்கமாக கேட்டால் என்னால் இலகுவாக பதிலளிக்க முடியும்.

  • ravi 11:35 am on February 9, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Joomla, Wordpress   

    வேர்ட்பிரஸ், ஜூம்லா, டுரோபல் போன்ற களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் என்ன? வேர்ட்பிரஸ், ஜூம்லா, டுரோபல் போன்றவற்றை என்னதேவைகளுக்காக உபயோகிக்கலாம். உதாரணத்துக்கு ஒரு தளம் காட்டவும்.

     
    • yk 12:34 பிப on மாசி 9, 2011 Permalink | Log in to Reply

      Bagi.
      ஊரோடிக்கு எதில் அனுபவமோ (software,Script,mac,Wordpress) அதைப் பற்றி விளக்கமாக ஒரு Guide OR About பக்கத்தை உருவாக்கிவிடுங்களேன். இல்லையேல் காலப்போக்கில் பலரின் தேவையற்ற கேள்விகளால் ஆஸ்க்.ஊரோடியை நீங்களே மூடிவிடுவீர்கள்.

      ஊரோடியிடமிருந்து இனையம் சார்பாக நிறைய கற்றுகொள்ள முடியும்.
      வாசகர்களே ஊரோடியிடம் பயனுள்ள கேள்விகளையே கேளுங்கள். அது மற்றவர்களுக்கும் உபயோகமாகவிருக்கும்.

      • பகீ 9:30 பிப on மாசி 9, 2011 Permalink | Log in to Reply

        yk உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நிச்சயமாக அப்படியான ஒரு பக்கத்தை உருவாக்குகின்றேன்.

    • பகீ 9:32 பிப on மாசி 9, 2011 Permalink | Log in to Reply

      ஒரு சாதாரண பயனாளருக்கு இவற்றிடையே பெரிதாக எவ்வித வித்தியாசமும் இல்லை. இணைய வழங்கி ஒன்றிற்கு ஜூம்லா மற்றும் துருபல் கொடுப்பது போன்ற சுமையை வேர்ட்பிரஸ் கொடுப்பதில்லை.

      உங்கள் திறனைப்பொறுத்து எவ்விதமான தளங்களாயும் இவற்றை மாற்றியமைக்கலாம். மிக அண்மையில் நான் ஒரு அகராதியை வேர்ட்பிரஸை மட்டும் கொண்டு வடிவமைத்திருந்தேன்.

  • sanjey 5:59 pm on February 6, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: , , Wordpress   

    HTML முலம் compose பண்ணப்பட் email ஐ பாவனையார்களுக்கு அனுப்ப outlook express ஐ பயன்படுத்தாமல் அனுப்பக்ககூடிய வழி ஏதும் தெரிந்தால் தயவு செய்து பரிந்துரைக்கவும்..!

     
    • பகீ 7:49 பிப on மாசி 6, 2011 Permalink | Log in to Reply

      Mailchimp இனை பயன்படுத்தலாம். இலவச கணக்கில் 12000 மின்னஞ்சல்கள் வரை அனுப்பலாம்.

      • sanjey 7:59 பிப on மாசி 6, 2011 Permalink | Log in to Reply

        Mailchimp இனை பாவித்து அனுப்பப்ட்டுள்ளது என்பது பெறுநர்களுக்கு தெரியக்கூடியதாயிருக்கும். எனவே இதனை பயன்படுத்துவது, சொந்தமாக இணைய வசதி இல்லாதவர்களுக்கு பயனுள்ளதாயிருக்கும். தங்கள் பயனாளர்களுக்கு தங்கள் இணையத்திலிருந்து அனுப்பப்படும் HTML வடிவ email களை அனுப்பும் வழிமுறை ஒன்றை பரிந்துரைக்கவும்..!

        • பகீ 8:48 பிப on மாசி 6, 2011 Permalink | Log in to Reply

          tellmatic இனை முயற்சி பண்ணி பாருங்கள் எனக்கு தெரிந்து இன்னமும் உயிரோடு இருக்கின்ற newsletter ஸ்கிரிப்ற்களில் ஒன்று இது.

          எனக்கும் ஒரு தேவை இருப்பதால் பல ஸ்கிரிப்களை பரிசோதித்துகொண்டு இருக்கிறேன். ஏதாவது இன்னமும் சிறப்பாய் கிடைத்தால் சொல்கின்றேன்.

  • ravi 1:12 am on February 6, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Wordpress   

    ask ஊரோடியில் தவறுதலாக‌ பதிந்த கேள்வியொன்றை பதிந்தவரே(user) எவ்வாறு நீக்குவது?

     
    • பகீ 10:14 முப on மாசி 6, 2011 Permalink | Log in to Reply

      அந்த வசதி இன்னமும் இல்லை.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel